![Bigil Bigil](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/11/Bigil-4-696x431.jpg)
பிகில் திரைப்படம் 31 நாளில் சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கிய இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
குடும்பம் குடும்பமாக இப்படத்தை கொண்டாட தொடங்கியதால் இன்று வரை இப்படம் பல தியேட்டர்களில் வெற்றிநடை போட்டு வருகிறது.
இதுவரை அதாவது 31 நாளில் இப்படம் சென்னையில் ரூ 14.07 கோடி வசூல் செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் செங்கல்பட்டு பகுதியில் 28 கோடி வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
#Bigil 31 days gross
Chennai City – 14.07 Cr
Chengalpet – Approximately 28 Cr