Pushpa 2

கோலாகலமாக நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் கொண்டாட்டம்.. புகைப்படங்கள் இதோ..!

அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது.

biggboss tamil 8 kondattam update
biggboss tamil 8 kondattam update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி ஏழு சீசனை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் தற்போது எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம் பிடித்திருந்தனர். இந்த நிகழ்ச்சி பல பேரின் பேவரைட் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது.

நிகழ்ச்சி முடிந்த சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் விதமாக பிக் பாஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஜெப்ரி, சௌந்தர்யா, ரயான் ஆகியோரிடம் பெற்றுள்ள வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.