பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு விஜய் டிவி சீரியல் குழுவினர் நுழைந்துள்ளனர்.
Bigg Boss5 Day102 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 102-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூர பூவே சீசன் 2 சீரியல் குழுவினர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
வரும் திங்கள் கிழமை முதல் இந்த இரண்டு சீரியல்களும் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.