பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என தெரியவந்துள்ளது.

Bigg Boss Ultimate 4th Elimination Voting Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை கண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்க போட்டியாளர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பங்கேற்றுள்ளனர். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து உடல்நலக் குறைபாடு காரணமாக வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனால் இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு கடந்த வாரம் முதல் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கே பி ஒய் சதீஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சி வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்களின் சினேகன் தான் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் தாடி பாலாஜி மற்றும் அபிராமி ஆகியோர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து சினேகன் அல்லது தாடி பாலாஜி வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.