பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரோமோ விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. முதல் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக நித்யா பேசியிருந்தார்.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோக்களில் ஷாரிக் உள்ளே நுழைய ஐஸ்வர்யா உற்சாகத்தில் வெட்கப்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருமே இந்த ஐஸ்வர்யாவை பார்த்ததே இல்லையே என ஐஸ்வர்யாவை கிண்டலடிக்கின்றனர்.

மேலும் மற்றோரு ப்ரோமோவில் ஐஸ்வர்யா தவறு செய்த போது தட்டி கேட்டிருக்க வேண்டும் என ரித்விகா கூற ஜனனி பானை டாஸ்கில் எனக்கும் ஐஸ்வர்யாவை போல கோபம் வந்தது அப்போது ஐஸ்வார்யா தான் என்னை கட்டுப்படுத்தினர் என கூறுகிறார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஐஸ்வர்யா தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராவரோ என சந்தேகம் ஏற்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.