bigg boss tamil season-8 contestant actor ranjith journey..
bigg boss tamil season-8 contestant actor ranjith journey..

மனித உணர்ச்சிகளுடன் ஒரு கேம் ‘பிக் பாஸ்’. பொறுமை, கோபம், திறமை, தோல்வி, வெற்றி, கர்வம், அன்பு என அத்தனை உணர்வுகளும் பீறிட்டு பொங்கும் ஒரு வீடு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி என்றால் மிகையல்ல.! இனி, இந்த வீட்டுக்குள் சென்ற 18 பேரில் இருவர் குறித்து இங்கே காண்போம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. கமல்ஹாசனுக்கு பிறகு, தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். ஆரம்பமே சிறப்பு..!

ஆம்., இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்களை வரவேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இதில், பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகர் ரஞ்சித்தை பார்த்ததும், ‘பார்ப்பதற்கே புது மாப்பிள்ளை போல இருக்கிறீர்கள் சார்..’ என சொல்லி வரவேற்றார்.

இதையடுத்து ரஞ்சித்தின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் விவசாயியாக எண்ட்ரி கொடுத்தார். பின்னணியில் ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்..’ பாடல் ஒலிக்க, கிராமத்தில் தலையில் துண்டை கட்டிக் கொண்டு, வயல் வெளியில் அறுவடை செய்வது போல.. அந்த வீடியோவில் அசத்தி இருந்தார் ரஞ்சித். பின்னர் பேசிய அவர்,

‘காசுக்காகவோ, அல்லது புகழுக்காகவோ இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் வரவில்லை’ என கூறிய ரஞ்சித், மக்களின் அன்பை அறுவடை செய்யவே இந்த பிக்பாஸில் கலந்துகொண்டதாக கூறினார்.

ரஞ்சித் உடன் அவரது நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் சேதுபதி ‘வணக்கம்’ என சொன்னதும், ரஞ்சித்தின் நண்பர் ‘சாப்டிங்களா..’ என கேட்டதோடு, எங்க ஊர்ல இப்படிதான் கேப்போம் என சொன்னார்.

அதற்கு விஜய் சேதுபதி, ‘எங்க ஊர்லயும் இந்த பழக்கமெல்லாம் இருக்குது.. எங்க ஊருக்கு வர்றவுங்கல வெளிய போங்கன்னா சொல்லுவோம்’ என தக் லைஃப் ரிப்ளை ஒன்றை கொடுத்தார். அதேபோல், ‘கவுண்டம்பாளையம்’ படம் எதிர்கொண்ட சர்ச்சை பற்றியும் ரஞ்சித்திடம் பேசினார் விஜய் சேதுபதி.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பெங்களூருவில் பிறந்து மாடலிங் துறையில் களமிறங்கி.. தர்பார் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து அறிமுகமான நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டான். தற்பொழுது பிக் பாஸ் வெற்றிக்கு நுழைந்து இருக்கிறார். திரௌபதி உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய கொஞ்சம் கரகரவென உள்ள குரல் காரணமாக, பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இருப்பினும், அதை தாண்டி தனது வெற்றியை பதிவு செய்வேன்’ என்றார் நம்பிக்கையுடன் சௌந்தர்யா.

உண்மைதானே., வெற்றிகள் என்பது இனிய குரலால் மட்டும் கிடைப்பதல்ல, அது அவரவர் செய்யும் செயல்களால் தானே கிட்டுகிறது.!