பிக் பாஸ் சீசன் 8 குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
Bigg Boss Tamil 8 Launch Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை ஏழு சீன்களை நிறைவு செய்துள்ளது.
இறுதியாக நடந்து முடிந்த சீசனில் அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து 8-வது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் மாதத்தில் ஏழாவது சீசன் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.