சூட்டிங் நடந்து முடிந்ததை தொடர்ந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. 

Bigg Boss Tamil 7 Title Winner Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி மிகப் பிரம்மாண்டமாக நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. 

அர்ச்சனா, மாயா, விஷ்ணு மணி சந்திரா மற்றும் தினேஷ் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருந்து வரும் நிலையில் கிராண்ட் பைனலுக்கான ஷூட்டிங் இன்று நடந்து முடிந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிடைத்த தகவலின் படி அர்ச்சனா தான் டைட்டிலை வென்றார் என சொல்லப்படுகிறது. நாளைய எபிசோட்டில் இது எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.