Bigg Boss Sendrayan : பிக் பாஸ் சென்றாயன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நீண்ட வருடங்களுக்கு முன்பு தல அஜித் செய்த உதவியை பற்றிய பேசியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சென்றாயன்.
இதற்கு முன்பாக சென்றாயன் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியே இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருந்தது.
இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார்.
அதாவது அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரஷ்ய சம்பவத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டியில் நடைபெற்றது. செம குளிர் என்பதால் அனைவருமே ஸ்வட்டர் அணிந்து கொண்டு இருந்தனர்.
ஆனால் நான் மட்டும் சாதாரண உடையிலேயே இருந்தேன். குளிர் என்னால் ஒன்றுமே முடியவில்லை.
அப்போது அஜித் என்னை அழைத்து ஏன் உங்களிடம் வேறு உடை இல்லையா என கேட்க நானும் இல்லை என கூறினேன்.
அதன் பின்னர் அவர் தன்னுடைய உதவியாளரை அழைத்து இவருக்கு ஒரு ஸ்வட்டர் வாங்கி கொடுங்க என கூறினார். அஜித் கூறிய 1 மணி நேரத்தில் எனக்கு ஸ்வட்டர் வந்து விட்டது.
ஸ்வட்டர் அணிந்த உடன் தான் எனக்கு உயிரே வந்தது. அதன் பிறகு தான் எனக்கு இன்னொரு உண்மையும் தெரிய வந்தது. அது என்னவென்றால் எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவர்க்கும் ஸ்வட்டர் வாங்கி கொடுத்தது அஜித் தான் என்பது என கூறியுள்ளார்.