Bigg boss season 8 Promo 2 update, Bigg boss season 8
Bigg boss season 8 Promo 2 update, Bigg boss season 8

பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி நேற்று கோலகலமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக விளையாட வேண்டும் என்றும் வீட்டிற்கு நடுவில் ஒரு பெரிய கோடு போட்டுள்ளதும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் பெண்கள் எந்த பெட் ரூம் எடுத்துக் கொள்ள வேண்டும் ஆண்கள் எந்த பெட்ரூம் வேண்டும் என்று நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.

பெண் போட்டியாளர்கள் மற்றும் ஆண் போட்டியாளர்கள் இருவருக்கும் ஒரே பெட்ரூம் பிடித்திருந்ததால் இருவரும் வாக்குவாதம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆண் போட்டியாளர்கள் உங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகவும் அதற்கு பதிலாக ஏதாவது ஒரு வாரத்தில் எங்களை நாமினேட் செய்யக்கூடாது என்ற கண்டிஷனை வைத்தனர். இதற்கெல்லாம் ஒத்துக்கொண்ட பெண் போட்டியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் இதில் ஜாக்லீனுக்கு உடன்பாடு இல்லை என்று தீபக் ரவீந்திரன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரிடம் இது குறித்து ஜாக்லின் வாக்குவாதம் செய்கிறார்.

இந்தக் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.