Bigg Boss season 8 contestant official announcement
Bigg Boss season 8 contestant official announcement

பிக் பாஸ் போட்டியாளர்கள் யார் யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.

போட்டியாளர்கள் யார் யார் வருவார் என்ற கேள்வி மற்றும் எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருந்த நிலையில் தற்போது போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

  1. தயாரிப்பாளர் ரவீந்திரன்
  2. நடிகை சச்சனா நமிதாஸ்
  3. என் எஸ் கே ரம்யாவின் கணவர் சத்யா
  4. குக் வித் கோமாளி சுனிதா
  5. பாரதிகண்ணம்மா அருண்
  6. ஆர் ஜே ஆனந்தி
  7. சௌந்தர்யா
  8. தென்றல் வந்து என்னை தொடும் பவித்ரா
  9. தர்ஷா குப்தா
  10. ரஞ்சித்
  11. தீபக்
  12. கானா பாடகர் ஜெஃப்ரி
  13. பொன்னி சீரியல் தர்ஷிகா
  14. VJ விஷால்
  15. செல்லம்மா சீரியல் அன்ஷிதா
  16. செல்லம்மா சீரியல் அர்ணவ்
  17. VJ. முத்து குமரன்
  18. நடிகை ஜாக்லின்

ஏற்கனவே ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் உள்ளே பிக் பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் இருக்கிறது. இதனால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியாளர்களில் உங்களுடைய ஃபேவரைட் போட்டியாளர்கள் யார் என்று எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.