பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் சில குறிப்பிட்ட தகவல்கள் எப்போது நிகழ்ச்சி தொடங்குகிறது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில் ஆறாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள் தானா?? எப்போதிலிருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி உள்ளிட்ட சில பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள் தானா?? எப்போதிலிருந்து நிகழ்ச்சி தொடங்குகிறது? வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் இரண்டாம் தேதி ஒளிபரப்பாக தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக குக் வித் கோமாளி சுனிதா, தொகுப்பாளினி டிடி, சர்ச்சை நடிகை ஸ்ரீநிதி உள்ளிட்ட வரும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.