
ஐஸ்வர்யா தத்தாவை நான் எதிர்த்து இருக்கணும், தப்பு பண்ணிட்டேன் என ரித்விகா அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானவர் ரித்விகா.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் 5 வாரத்துக்கு அப்புறம் தான் எல்லார் கிட்டயும் பேச தொடங்கினேன், என்னுடைய பழக்கம் அப்படி தான், அவ்ளோ சீக்கிரம் யாரிடமும் பேச மாட்டேன் என கூறியிருந்தார்.
மேலும் பாலாஜி மீது ஐஸ்வர்யாவை நான் எதிர்த்து இருக்கணும், என் குரலை உயர்த்தி இருக்கணும் என கூறியுள்ளார். அப்போது பாலாஜி அண்ணா என்னிடம் நன்றாக பேசி கொண்டிருந்தார்.
ராணி செய்வதையெல்லாம் ஏற்று கொள்ள வேண்டும் என அமைதியாக இருந்திருக்க கூடாது, நான் தப்பு பண்ணிட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் நீங்கள் ஜெயிக்கவில்லை என்றால் யார் ஜெயித்து இருப்பார்கள் என கேட்டதற்கு யாஷிகா, ஐஸ்வர்யா,அல்லது ஜனனி என பதிலளித்துள்ளார்.