Riythvika

Bigg Boss Riythvika : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகா தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவை மெட்றாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரித்விகா. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது விபசார பெண்ணாக நடித்திருந்த டார்ச் லைட் படம் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்கு பிறகு தற்போது முதல் முறையாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுவும் ரித்விகாவை அறிமுகப்படுத்திய பா.ரஞ்சித் படம் தான். ஆம், பா.ரஞ்சித் தயாரிக்க உள்ள இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் ரித்விகாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.