தமிழ் சினிமாவில் அஞ்சாதே, சென்னை 28, மற்றும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலக்ஷ்மி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நாயகி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கமல்ஹாசான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் கராத்தே கிளாஸ் சென்ற போது அந்த மாஸ்டர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் தான் அதை உடனே தன்னுடைய தந்தையிடம் கூறி விட்டதாகவும் கூறியுள்ளார்.
விஜி தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திரையுலக பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி #MeToo என்ற ஹாஸ்டேக்கில் கூறி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.