
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து இன்று யாஷிகா வெளியேற்றப்பட உள்ளார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/oDxb6a6KMK
— Vijay Television (@vijaytelevision) September 23, 2018
அதாவது பைனலுக்கு சென்ற போட்டியாளர்களை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து அவர்களுடைய குடும்பத்தாருடன் போனில் பேச வைக்கிறார்.
விஜயலட்சுமியின் கணவர் போனில் பேச விஜி லவ் யூ அண்ட் நிறைய கிஸ் என கூற கமலஹாசன் இது குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சி U/A ஷோ என கூறுகிறார்.