பிக் பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான் என காஜல் போட்டோ ஒன்றை வெளியிட்டு போட்டியாளரை கலாய்த்துள்ளார்.
Bigg Boss Kajal Tweet : பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீஸனின் போட்டியாளரான காஜல் தற்போது மூன்றாவது சீசன் குறித்து தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.
தன்னுடைய முன்னாள் காதலர் சாண்டி இருப்பதால் அவர் ஒரு நாளும் பிக் பாஸை பார்க்க தவறுவதே இல்லை. இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவிட்டு அபிராமியை பச்சோந்தி என சொல்லாமல் சொல்லியுள்ளார்.
முதல் வாரத்தில் சாக்ஷி ஷெரின்என இரண்டு பெண்களுடனும் கவினுடன் இருந்தார். இரண்டாம் வாரத்தில் வனிதா மற்றும் தர்ஷனுடன் நட்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மூன்றாவது வாரத்தில் மதுமிதாவுடனும் ஆண்களில் முகெனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஆனால் இந்த மீம்மை போட்டு விட்டு நான் ஒன்னு சொல்லல என வாயை மூடிட்டு இருக்கும் ஸ்மைலியை தட்டி விட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு குசும்பு தான் என கலாய்த்து வருகின்றனர்.
— Kaajal Pasupathi (@kaajalActress) July 16, 2019