டின்னர் பார்ட்டியில் பிரபல நட்சத்திரங்களுடன் பிக் பாஸ் ஜூலி கலந்து கொண்டு எடுக்கப்பட்ட கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமான ஜூலி விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான ‘பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர். ஆரம்பத்தில் மக்களின் ஆதரவை அதிகமாக பெற்று வந்தார். ஆனால் தனது நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு அவர் என்ன செய்தாலும் அதனை பலரும் கேலி செய்து கலாய்த்து வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் சிறிதும் மனம் தளர்ந்து போகாத ஜூலி தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோ ஷூட் என பிஸியாகவே இருந்து வந்தார். மேலும் மக்கள் மத்தியில் தன் மீதிருக்கும் வெறுப்பை மாற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அதேபோல் மக்கள் மனதை மாற்றியமைத்த ஜூலி தற்போது மக்களின் ஃபேவரிட் ஆகவே மாறியுள்ளார். இதற்கு இடையில் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் செய்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதிக ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

அதனால் தற்போது டின்னர் பார்ட்டியில் மாடர்ன் உடையில் பிரபல நட்சத்திரங்களுடன் கலந்து கொண்ட ஜூலி அப்பொழுது எடுக்கப்பட்ட கலக்கலான புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதனை ரசிகர்கள் அதிக அளவில் லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.