பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

Bigg Boss Jodigal Title Winner Details : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது. நான்கு சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் இணைந்து தற்போது பங்கேற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.

இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

எட்டாவது குழந்தையாக, ஏன் கண்ணன் வந்தான்?

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஷாரிக் மற்றும் அனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments | Latest Cinema News

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை உறுதியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சாரிக் மற்றும் அனிதா இதுவரை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக நடனம் ஆடி பாராட்டுகளை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.