பிக் பாஸ் அருண், அர்ச்சனாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. குவியும் வாழ்த்து.!!

பிக் பாஸ் அருண் மற்றும் அர்ச்சனாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Bigg Boss Arun and Archana got engaged
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரபலமானவர் அருண். அதேபோல் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் இவர்கள் மௌனம் காத்தே வந்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சீசனான பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி சுற்றில் அர்ச்சனா அருணை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார் அப்போது அருண் அனைவர் முன்னாலும் அவர்கள் காதலிப்பதாக உறுதிப்படுத்தி இருந்தார் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அருண் மற்றும் அர்ச்சனாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக அருண் போட்டோவுடன் அறிவித்துள்ளார்.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram