Bigg Boss Aarav

Bigg Boss Aarav : பிக் பாஸ் ஆரவ்வின் அடுத்த படத்தின் இயக்குனர் அஜித்திற்கு பல மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் தான் என்பது அதிகாரபூர்வாக வெளியாகியுள்ளது.

மாடலிங் நடிகரான ஆரவ் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்கு பிறகு ஆரவ் ராஜபீமா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது ஆரவ்வின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஆரவ்வும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலமாக உறுதி செய்துள்ளார்.

ஆம், அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. தல அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மெகா ஹிட் படங்களையும் விக்ரமின் ஜெமினி படத்தை இயக்கியவருமான சரண் தான்.

இவர்கள் இணைய உள்ள புதிய படத்திற்கு மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ் எனவும் பெயரிட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் இந்த படத்தில் ராதிகா, நாசர், யோகி பாபு என பலர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.