இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஷூட்டிங்கை முடிக்காமல் உலக நாயகன் கமல்ஹாசன் பாதியிலேயே கிளம்பி விட்டதாக சொல்லப்படுகிறது.

Bigg Boss 7th Elimation Shooting Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மாலை போட்டிருக்கும்போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?

இதனையடுத்து பூரண குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன கமல் நேராக பிக்பாஸ் ஷூட்டிங்கிற்கு தான் சென்றார். பொதுவாக சனிக்கிழமை காலை ஆரம்பித்து மாலைக்குள் இரண்டு நாளைக்கான ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு விடும். ஆனால் இந்த வாரம் அப்படி நடக்கவில்லை. சனிக்கிழமை எபிசோடு ஷூட்டிங்கை முடிக்கவே மாலை 5 மணி ஆனதாக சொல்லப்படுகிறது. உடல்நலக் குறைபாடு காரணமாக கமல்ஹாசன் மிகவும் சிரமப்பட்டு இதனைத் தொகுத்து வழங்கியதாக கூறுகின்றனர்.

எமனோட போராடிட்டு வந்து இருக்கோம் – Director Vasanthabalan & Producer Sridharan Emotional Speech

இதன் காரணமாகவே ஞாயிற்றுக் கிழமையான இன்றைய ஷூட்டிங் இன்னும் நடைபெறவில்லை. இன்று தான் இந்த சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே புரோமோ இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. மேலும் இந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‌‌ ‌‌ ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.