இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் என்பது குறித்து இறுதி கட்ட ஓட்டிங் நிலவரங்களை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் எட்டாவது எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது. 

இதற்கான நாமினேஷன் பட்டியலில் விசித்ரா, பூர்ணிமா, ரவீனா, மணிச்சந்திரா, கானா பாலா, சரவணன் விக்ரம், அக்ஷயா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களில் இறுதிக்கட்ட நிலவரப்படி சரவணன் விக்ரம் மட்டுமே மிகக் குறைந்த ஓட்டுக்களைப் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு அடுத்த இடத்தில் கானா பாலா உள்ளார். இதனால் 90% வெளியேறப் போவது பிக் பாஸ் டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் தான் என சொல்லப்படுகிறது.

ஆனால் கமல் செய்யப்போகும் மேஜிக் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.