இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வார நாமினேஷன் பட்டியல் வெறும் மூவர் மட்டுமே இடம்பெற்ற நிலையில் குறைவான ஓட்டுக்களை பெற்ற சரவணன் விக்ரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நிக்சன், மாயா, தினேஷ், விஷ்ணு, மணி சந்திரா மற்றும் ரவீனா ஆகியோர் தான் அந்த போட்டியாளர்கள் என பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்றில் அறிவித்துள்ளார்.
மேலும் கிராண்ட் பைனல் நெருங்கி வரும் நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் முதல் ஆளாக நிக்சன் வெளியேறுவார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.