அர்ச்சனா சொன்ன வார்த்தை ஒரு பக்கம் இருக்க மாயாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் 62 வது நாள் எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கமல்ஹாசன் நிக்சனின் கேப்டன்சி பிடித்தவர்களை ஒரு பக்கமும் பிடிக்காதவர்களை ஒரு பக்கமும் உட்கார சொல்கிறார். மணி விக்ரமின் 2.0 மாதிரி இந்த கேப்டன்சி இருந்ததாக கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து அர்ச்சனா மாயா அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மணி அடித்தது ஒரு கண்துடைப்பு தான் என சொல்கிறார். நிக்சனின் கேப்டன்சி பிடித்திருக்கிறது என்ற பக்கத்தில் உட்கார்ந்த மாயாவை எழுப்பி கமல் ஏன் பெல் அடிச்சிங்க? ஏன் நிக்சன் பக்கம் உட்காந்து இருக்கீங்க என கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார்.