பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது நாளில் சண்டை வெடித்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது நாளே வெடித்த சண்டை.. இந்த முறை வனிதா இவர்தானா?? வைரலாகும் வீடியோ

இரண்டாவது நாளான இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை வெடித்துள்ளது. வீட்டினர் மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் விஜே மகேஸ்வரி காலையில் ஒரு முறை மாலை ஒரு முறை மட்டுமே டி காபி கொடுக்க முடியும் அதற்கிடையில் தர முடியாது என சொல்ல அஸீம் நீங்க பிக் பாஸே கிடையாது என எதிர்த்து பேசுகிறார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது நாளே வெடித்த சண்டை.. இந்த முறை வனிதா இவர்தானா?? வைரலாகும் வீடியோ

அதன் பிறகு திருநங்கை போட்டியாளர் இந்த டீ விவகாரம் குறித்து விவரித்துப் பேசும்போதும் மகேஸ்வரி குறுக்கிடுகிறார். இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த சீசன் வனிதா மகேஸ்வரி தானா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.