பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்து ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பட்டியல் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி நட்சத்திரங்களான ரக்சன், கிராமிய பாடல் பாடும் ராஜலட்சுமி, தொகுப்பாளினி டிடி போன்ற ஒரு சில நட்சத்திரங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் கவர்ச்சி உடையில் அதிக ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்க கூடிய நடிகைகளான தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.