
புது வீட்டிற்கு செல்வதற்குள் தாமரைச்செல்வி வீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரைச்செல்வி.
தெருக்கூத்து கலைஞரான இவருக்கு முதல் திருமண வாழ்க்கை கசந்து போன நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் தாமரைச்செல்வி குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இவர்களுக்கு புது வீடு கட்டித் தருகிறார். இந்த புது வீட்டிற்கு தாமரைச்செல்வி குடி போவதற்குள் அவரது தந்தை காலமாகியுள்ளார்.
கடந்த மே 31ஆம் தேதி இவர் உயிரிழந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட ரசிகர்கள் பலரும் கண் கலங்கி ஆறுதல் கூறியுள்ளனர்.
