நடிகை பூமிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் பூமிகா. இவர் தமிழில் விஜயின் ‘பத்ரி’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பூமிகா தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இவர் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் பூமிகா தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழிலும் அதேபோல் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் 30-வது படத்தில் அவருக்கு சகோதரியாக நடிக்க பூமிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.