நீ ஏன் சமையல் அம்மான்னு கூப்பிட என லஷ்மியிடம் கேள்வி எழுப்புகிறார் பாரதி.

Bharathi Kannamma Update 19.08.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லஷ்மியை பெற்றவர்கள் வந்தா தான் அனுப்புவேன் என அவரை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வைத்துள்ளார் பாரதி‌.

மாத வாரியாக, ஏகாதசி மகிமைகள்..

லஷ்மி டெட்டஸ்கோப் வைத்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்த பாரதி நீ ஏன் கண்ணம்மாவை சமையல் அம்மா என கூப்பிடுற என கேட்கிறார். அவங்க என் ஸ்கூல்ல சமையல் செய்றாங்க அதனாலத்தான் அப்படி கூப்பிடுகிறேன் என லஷ்மி கூறுகிறார். ஹேமாவும் இப்படித்தானே கூப்பிடுறா என லட்சுமி கூற நீ ஏன் கூப்பிடுற என கேட்டு விட்டு பேச்சை மாற்றி விடுகிறார்‌.

குடும்பத்தில் உள்ள எல்லோரும் பாரதி ஏன் இப்படி பண்றான் அவனுக்கு என்ன ஆச்சு? அவனுக்கு உண்மை தெரிஞ்சிருச்சா என புலம்பிக் கொண்டிருக்கின்றனர். லஷ்மி படிக்கும் பள்ளிக்கு செல்லும் கண்ணம்மாவிடம் லஷ்மி குறிப்பில் நலம் விசாரித்த மிஸ் ஹேமா இங்க தான் படிக்க போறா என்ற உண்மையை கூறுகின்றனர். ‌ இதனால் கண்ணம்மா மகிழ்ச்சி அடைகிறாள்.

இன்னொரு புறம் வெண்பா சாந்தியுடன் அஞ்சலி இந்த உலகத்தை விட்டு போக போறா என அஞ்சலி பிரச்சினையை கூறி சந்தோஷப்படுகிறார். ‌‌ ‌‌ கண்ணு வீட்டை விட்டு வெளியே போயிட்டா அஞ்சலி செத்து போய்டுவா இந்த சொசோகத்திலேயே சௌந்தர்யா காலியாகிடுவாங்க. அப்புறம்னா பாரதியுடன் ஜாலியா வாழ்வேன் என வெண்பா கூறுகிறார்.

Shah Rukh Khan-னின் இன்னொரு Role-க்கு ஜோடி இவர்தான்.!

மருத்துவமனையில் பாரதி ஏதோ ஒரு யோசனையில் இருக்க அங்கு வரும் வெண்பா என்ன ஆச்சி எனக் கேட்கிறார். பாரதி யாரை நம்புறதுனே தெரியல என புலம்பி கண் கலக்குகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.