ரோஷினி விலகலால் பாரதி கண்ணம்மா சீரியல் பாக்கியலட்சுமி சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Bharathi Kannamma TRP Rating Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் தற்போது பாரதி கண்ணம்மா விவாகரத்து கேஸ் நடந்து வருகிறது. பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் விவாகரத்து கிடைக்குமா கிடைக்காதா அடுத்து என்ற நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

‘புதிய கோச்சர்’ டிராவிட், இந்திய அணியை மேலும் பலப்படுத்துவாரா? : காம்பீர் விளக்கம்

இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‌‌

தாய் உள்ளம் கொண்டவர் சிம்பு! – Producer K.Rajan Bold Speech | Maanaadu Audio Launch | HD

இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. டிஆர்பியில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த இந்த சீரியல் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலுக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ளது. கண்ணம்மா மாற்றப்பட்டது இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது.