
இதெல்லாம் ஓவரா தெரியலயா ஓடாத சீரியலுக்கு வெற்றி கொண்டாட்டமா என விஜய் டிவியை கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் முதல் பாகம் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று பிறகு வெறுப்பை சம்பாதித்து முடிவுக்கு வந்தது.

இந்த சீரியல் முடிவடைந்த அடுத்த நாளே ரசிகர்களின் விருப்பம் இன்றி இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. பார்ட் வேண்டாம் என்று ரசிகர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய் டிவி சீரியலை தொடங்கிய சில மாதங்களிலேயே இழுத்து மூடு மூடு விழா நடத்தி விட்டது.
ரேட்டிங்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இப்படியான நிலையில் பாரதி கண்ணம்மா வெற்றி விழா கொண்டாட்டம் என இரண்டு சீசன் பிரபலங்களையும் ஒன்று சேர்த்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது விஜய் டிவி.
இது குறித்த ப்ரோமோ வீடியோக்களை டிவி சேனல் வெளியிட ரசிகர்கள் பலரும் ஓடாத சீரியலுக்கு வெற்றி கொண்டாட்டமா என ரசிகர்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.
