இதுக்கு எதுக்கு சீசன் 2 ஆரம்பிக்கணும் சீக்கிரம் முடிக்கணும் என விஜய் டிவியை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி போக போக வெறுப்பை உண்டாக்கி முடிவுக்கு வந்தது.

இந்த சீரியல் முடிந்த மறுநாளில் இருந்தே சீசன் 2 ஒளிபரப்பாக தொடங்கியது. வினுஷா தேவியே நாயகியாக நடிக்க அருண் பிரசாத்துக்கு பதிலாக சிப்பு சூர்யன் நடித்து வந்தார். ஆரம்பம் முதலே நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வந்த சீரியல் இந்த வாரத்தோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.

பரபரப்பான இறுதி அத்தியாயம் என ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ப்ரோமோஷன் செய்து வர ரசிகர்கள் கமெண்ட் செய்து கண்டம் செய்து வருகின்றனர்.

சீசன் 2 வேண்டாம் வேண்டாம்னு சொன்னோமே கேட்டியா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுக்கு எதுக்கு சீசன் 2 தொடங்கணும்? சீக்கிரம் முடிக்கணும் என கலாய்த்து வருகின்றனர். Rip பாரதி கண்ணம்மா 2 என்றெல்லாம் பங்கம் பண்ணி வருகின்றனர்.