
பாரதிகண்ணம்மா சீரியல் முடிவடைந்த வேகத்தில் வேறு சேனலுக்கு தாவியுள்ளார் பரீனா.
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல், மாறுபட்ட ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் சூப்பர் ஜோடி, சரிகமப சீசன் 3 நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 1-ம் தேதி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சுட்டி குழந்தைகள் தங்களது இனிமையான குரலால் மக்களை கவர்ந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் ஞாயிறு தோறும் இரவு 8.30 மணிக்கு டக்கரு டக்கரு என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி தொடங்கபட உள்ளது, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியை பரீனா மற்றும் ஆர் ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமான ஃபரீனா தற்போது மீண்டும் ஜீ தமிழ் வந்துள்ளார். நடிகையாக இல்லாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் பேரன்பு மற்றும் சீதாராமன் சீரியல் குழுவினர் பங்குபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
