வெண்பாவின் திட்டத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் கண்ணம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கல்யாணத்துக்காக மண்டபத்தில் ஷர்மிளா எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருக்க அப்போது கண்ணம்மா வர அவரை வரவேற்று உள்ளே உட்கார வைக்கிறார்.

வெண்பாவின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த கண்ணம்மா.. பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

லட்சுமி குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்க கண்ணம்மா அவளை தண்ணீர் குடிக்க கூட்டிச் செல்ல இவர்களைப் பார்த்த சாந்தி வெண்பாவிடம் விஷயத்தை சொல்ல இருவரும் கண்ணம்மாவை வெறுப்பேத்த முயற்சி செய்ய அப்போது கண்ணம்மா நான் கல்யாணத்துக்கு வரல இந்த கல்யாணம் நடக்குதா இல்லையா என்று பார்க்க வந்தேன். இந்த வெண்பா யாரு என்னெல்லாம் வேலை பண்ணுவானு எனக்கு தெரியும். யாருக்குத் தெரியும் கடைசி நேரத்துல நீ கல்யாணத்தை நிறுத்தலாம் மண்டபத்து விட்டு எஸ்கேப் ஆகலாம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அத வேடிக்கை பார்க்க தான் வந்தேன் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

இந்த பக்கம் டிஎன்ஏ ரிசல்ட்க்காக காத்திருக்கும் பாரதி கிளினிக்கு போன் போட்டு டிஎன்ஏ ரிசல்ட் என்னாச்சு இன்னும் வரவில்லை வந்ததும் போன் பண்ணுவதாக சொல்ல பாரதி கொஞ்சம் சீக்கிரம் கொடுக்க பாருங்க என கெஞ்ச அவர்களும் முடிந்த அளவுக்கு சீக்கிரம் கொடுக்கிறோம் என கூறுகின்றனர்.

வெண்பாவின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த கண்ணம்மா.. பாரதிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து ரூம் வெண்பா உட்கார்ந்து இருக்க அங்கு வரும் ரோஹித் வெண்பாவிடம் ரொமான்ஸ் செய்ய இது எல்லாம் பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார். பிறகு ரோஹித் வெளியே வர வெண்பா பாரதிக்கு போன் போட்டு கோவிலுக்கு போயிட்டியா எங்க இருக்க என்ன கேட்க பாரதி வீட்டில் தான் இருக்கிறேன் என சொல்ல வெண்பா திட்டுகிறார்.

ஏமாத்திட மாட்ட தானே? என பாரதியை மிரட்ட கண்டிப்பாக வந்து விடுவேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.