பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அஞ்சலியைக் கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannamma Episode Update 20.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. நீதிமன்றத்தில் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் என்ன தீர்ப்பு வரும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என வேணு கூறுகிறார்.

பிறகு நீதிபதி அவர்களுக்கு அறிவுரை வழங்கி பாரதி கேட்ட விவாகரத்தை இந்த நீதிமன்றம் வழங்க சம்மதிக்கவில்லை என தெரிவிக்கிறது. இருவரும் இதை இடத்திற்கு வந்து நிற்பதற்கு காரணம் சரியான புரிதல் இல்லாதது தான் என கூறுகிறார். மேலும் இவர்கள் இருவரும் ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரதி பிரியணும் என்று வந்தா நீங்க சேர்ந்து வாழ சொல்றீங்க இது எந்த விதத்தில் நியாயம் என நீதிபதியை காட்டம்பட்டி கேட்க இது கோர்ட் இங்கே சத்தம் போட்டு பேசக்கூடாது என நீதிபதி கூறுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)

பிறகு தீர்ப்பு குறித்து கண்ணம்மா குறித்து நீதிபதி கேட்க அவர் எனக்கு சம்மதம் என கூறுகிறார். பிறகு பாரதியிடம் கேட்க அவரும் நீதிமன்றத்தின் உத்தரவு படி நடந்து கொள்வதாக கூறுகிறார். இந்தப் பக்கம் சாந்தி கண்ணம்மாவின் மாமா மாயாண்டி போன் செய்து நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சொல்கிறார். அப்படினா வெண்பா சொன்ன மாதிரி அஞ்சலியை தீர்த்து கட்டி விட வேண்டியதுதான் என சொல்ல உடனே வேலையை முடி என சாந்தி கூறுகிறார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar 

அகில் சௌந்தர்யாவுக்கு போன் செய்ய சௌந்தர்யா எடுத்துப் பேசி கோட்டில் நடந்ததை கூறுகிறாள். அஞ்சலி கிட்டேயும் சொல்லு அவளும் சந்தோஷப்படுவா என கூறுகிறார். அம்மா சந்தோஷமா இருக்காங்க அவங்க கிட்ட இத சொல்லி கஷ்டப் படுத்தக் கூடாது என அகில் போனை வைத்துவிட்டு அஞ்சலியைத் தேடுகிறார்.

பிறகு கோர்ட்டில் அனைவரும் இன்று தீர்ப்பு குறித்து பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சௌந்தர்யா பாரதியை அழைக்கிறார். இருவரும் சேர்ந்து வாழும் காலத்தில் பிரச்சனைகள் தீர்ந்து ஒன்று சேர வேண்டும் என கூறுகிறார். நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன் என பாரதி சொல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.