கண்ணம்மாவுக்கு அவரது அப்பா அடிச்சு கொடுக்க பாரதியிடம் சௌந்தர்யா சத்தியம் ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா தனது கையால் சமைத்து அப்பா அம்மாவுக்கு கொடுக்க வேண்டும் என ஆசையாக சமைக்கிறாள்.

தன்னுடைய அக்கா சாந்தியிடம் அப்பா தன்னுடைய சாப்பாட்டை சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என சொல்ல வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என சொல்ல அப்பா நீ சமைத்த சாப்பாடு என தெரிந்தால் சாப்பிடுவாரா என்று கூட தெரியல என சாந்தி சொல்கிறார். இந்த நேரத்தில் சரியாக கண்ணம்மாவின் அப்பா வீட்டுக்கு வந்து சாப்பாடு கேட்க சாந்தி தான் சமைத்தது என சொல்லி பரிமாறுகிறார்.

மறுபக்கம் கண்ணம்மா தன்னுடைய அம்மாவுக்கு சாப்பாடு ஊட்டி விட அப்போது கண்ணம்மாவின் அப்பா சண்முகம் உண்மையாகவே இது நீ சமைத்தது தானா? வாசனையே வித்தியாசமா இருக்கு என கேட்க சாந்தி யூட்யூபில் பார்த்து சமைத்தேன் என சமாளித்து விடுகிறாள்.

அதன் பிறகு பேங்கில் இருந்து நோட்டீஸ் வந்திருப்பதாக சொல்ல இதைக்கேட்ட கண்ணம்மா நான் வேணும்னா வேலைக்கு போகட்டுமா என கேட்க உன்னுடைய பணத்தை நீயே வச்சுக்க இதை யாரும் இங்கே கேட்கல என கோபத்தை காட்டி விட்டு சண்முகம் வாத்தியார் சாப்பிடாமல் எழுந்து செல்கிறார்.

அதன் பிறகு கண்ணம்மாவுக்கு அவளுடைய அம்மா சின்ன வயதில் ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்த பொன் கம்பளை எடுத்து கொடுக்கிறார். பிறகு இந்த ரவுடி பிரச்சினைகள் குறித்து கேட்க பாரதியுடன் பேசுவதாக மது சொல்லியிருப்பதாக கண்ணம்மா சொல்கிறார்.

மறுபக்கம் பாரதி வீட்டில் எல்லோரும் பெண் பார்க்க கிளம்பி கொண்டிருக்க பாரதி தன்னுடைய நண்பன் கடை திறப்பு விழாவுக்கு சென்று விட்டு நேராக அங்கே வந்து விடுகிறேன் என சொல்ல விஜய்யும் அவனது அம்மாவும் இந்த திருமணத்தை நிறுத்த திட்டமிடுகின்றனர். சௌந்தர்யா பாரதியிடம் இன்று ஒரு நாள் மட்டும் கொடுக்கக் கூடாது என சத்தியம் செய்ய சொல்ல முதலில் தயங்கும் பாரதி பிறகு சத்தியம் செய்கிறான்.

அப்போது கண்ணம்மா மதுவுக்கு போன் போட்டு பாரதி என்ன சொன்னான் என கேட்க மது பாரதி முன்ன மாதிரி இல்ல அவ ரொம்ப மாறிட்டான். உனக்கு உதவி பண்ண முடியாதுன்னு சொல்றான் என சொல்லிக் கொண்டிருக்க இதை கேட்கும் பாரதி போனை வாங்கி கண்ணம்மாவிடம் நான் டவுனுக்கு தான் போறேன் ஒரு மணி நேரம் கழிச்சு எனக்கு போன் பண்ணு பிரச்சனையை சரி பண்ணிடலாம் என சொல்கிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.