வெண்பாவை சுட்டு தள்ளிய சவுந்தர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் கடைசியில் எதிர்பாராத அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது.

Bharathi Kannamma Episode Update 12.09.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வெண்பா தான் கண்ணம்மா விவாகரத்து முடிவு எடுக்க காரணம் என கூறி வெண்பா வீட்டுக்கு செல்கிறார். அங்கு வெண்பா பாரதியும் கண்ணம்மாவும் விவாகரத்து பெற்று பிரிய போகிறார்கள் என போனில் பேசினார்.

நவராத்திரி பூஜை : பரிபூரண அருள் பெற, இதோ ஸ்லோகம்

இதனையடுத்து வெண்பா எதிரில் சவுந்தரியா வந்து நிற்க ஆன்ட்டி நீங்க எப்ப வந்தீங்க என கேட்கிறார். நீங்க பாரதியும் கண்ணம்மாவும் விவகாரத்து வாங்க போறாங்கனு சொன்னியே அப்பவே வந்துட்டேன் என கூறுகிறார். இதனையடுத்து இனிமே உன்னை விட போறது இல்ல, நீ உயிரோட இருக்க வரைக்கும் அவங்கள சேர விட மாட்ட என கூறி துப்பாக்கியை முகத்துக்கு நேராக நீட்டுகிறார். அதிர்ச்சியான வெண்பா வேண்டாம் ஆன்ட்டி என கெஞ்சுகிறார். பின்னர் பாரதியை அடைய என்ன வேணாலும் செய்வேன் என கூறி துப்பாக்கியைப் சவுந்தர்யா பக்கம் திருப்புகிறார் வெண்பா.

நானும் Jiiva-வும் ஒரே Road-ல இருந்து வந்தவங்கதான் – Mirchi Shiva Funny Speech..! | GoalMaal Pooja HD

பின்னர் வெண்பாவை கீழே தள்ளி விட்ட சவுந்தர்யா அவரை சுட்டு தள்ள கண்ணம்மா வந்து அத்தை என அழைக்கிறார். போலீஸ் வந்து சவுந்தர்யாவை கைது செய்கிறது. திடீரென வெண்பா எழுந்து சௌந்தர்யா என கூச்சலிட்டு அவரை சுட முற்படுகிறார். உடனே கண்ணம்மா குறுக்கே வந்து அவரது அத்தையை காப்பாற்றுகிறார். இறுதியில் இவை அனைத்தும் கண்ணம்மாவின் சிந்தனை தான்.

தொடர்ந்து சவுந்தர்யா யார் உன் வாழ்க்கையை கெடுக்கிறது என கேட்க நீங்கதான் அத்தை. நான் உண்மை தெரியுது உங்களிடம் கேட்கும் போது ஏதேதோ சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்கள். ஹேமா என் மகள் என்று உண்மையைச் சொல்லவில்லை. இதனால் நான் போட்ட நாடகம் தான் இந்த விவாகரத்து எனக் கூறுகிறார்.

உடனே நான் அம்மாவை போய் பார்த்தேன் நான் தான் என் அம்மா என்ன சொல்லப் போகிறாய். இவ்வளவு நாளா அவளுக்கு கொடுக்காதத பாசத்தைக் கொட்டி கொடுக்கப் போகிறேன். அவள கூட்டிட்டு வந்து இந்த வீட்டில் வைத்து வளர்க்க போகிறேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

உடனே சௌந்தர்யா தன்னுடைய கணவருக்கு போன் செய்து நடந்ததை கூறி பாரதியையும் ஹேமாவை ஏன் வேறு எங்காவது அனுப்புங்கள் என சொல்கிறார். உடனே பாரதியின் அப்பா அவர்கள் இருவரையும் வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார். இதற்கிடையில் கண்ணம்மா வந்துவிடுகிறார்.

கண்ணம்மாவை பார்த்ததும் ஹேமா சமையல் அம்மா என்னை கட்டிக் கொள்கிறார். ஹேமாவிற்கு முத்தமழை பொழிகிறார் கண்ணம்மா. இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.