ஹேமா பிரிந்து சென்றதால் பயங்கர விரக்தியில் உள்ளார் பாரதி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமாவை அழைத்துக் கொண்டு கண்ணம்மா வீட்டுக்கு போக ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்ல பிறகு ஹேமா கண்ணம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு மீண்டும் உண்மையாகவே நீங்க தான் என் அம்மாவா பொய் சொல்லலையே என கேட்க கண்ணம்மா உண்மையாகத்தான் சொல்கிறேன் என சொல்ல ஹேமா சந்தோஷப்படுகிறாள்.

பிரிந்து சென்ற ஹேமா.. விரக்தியில் பாரதி செய்த வேலை, வெண்பா விஷயத்தில் ரோஹித் எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் ஷர்மிளா, ரோஹித் வெண்பா இப்படி பண்ணிட்டாலே என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஷர்மிளா இந்த விஷயத்துக்காக என் பொண்ண வெறுத்துடாதீங்க மாப்பிள்ளை என கையெடுத்து கும்பிட்டு கேட்டு ரோஹித் இந்த ஜென்மத்தில் உங்க பொண்ண வெறுக்க மாட்டேன் அவ என் பொண்டாட்டி என கூறுகிறார்.

பிரிந்து சென்ற ஹேமா.. விரக்தியில் பாரதி செய்த வேலை, வெண்பா விஷயத்தில் ரோஹித் எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து பாரதி இரவில் தூக்கம் வராமல் ஹேமாவை நினைத்து பொருட்களை தூக்கி போட்டு உடைத்து நொறுக்க வீட்டில் இருப்பவர்கள் யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இந்தப் பக்கம் கண்ணம்மா வெளியே சென்றிருக்க ஹேமா எழுந்ததும் லட்சுமி அவளுக்கு காப்பியை எடுத்து வந்து கொடுத்து குடிக்க வைக்கிறாள். நான் உனக்கு அக்கா. அக்கா மட்டும் இல்ல இரண்டாவது அம்மா என உருக்கமாக பேசுகிறார்.

பிரிந்து சென்ற ஹேமா.. விரக்தியில் பாரதி செய்த வேலை, வெண்பா விஷயத்தில் ரோஹித் எடுத்த முடிவு - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

விடிந்ததும் அகிலன் பாரதி ரூமுக்கு சென்று எதுக்குடா இப்படி பண்ணிட்டு இருக்க? அப்பா அம்மா எவ்வளவு வருத்தப்படுவாங்க என கேட்க உங்களுக்கு என் மேல பாசம் இருக்கா என பாரதி திருப்பி கேள்வி கேட்கிறார். அகிலன் நீ இப்படி ஒரு வேலையை பண்ணா யாருக்குத்தான் கோவம் வராது என கேட்க நான் ஒன்னும் சும்மா கல்யாணத்துக்கு ஒத்துக்கல டி என் ஏ டெஸ்ட் எடுத்திருக்கேன் என சொல்ல அகிலன் ஷாக்காகிறான். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.