
சித்ராவால் கண்ணம்மாவை ரவுடிகள் கத்தியால் குத்தி உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பஸ்ஸில் ஒன்றாக வரும் கண்ணம்மா மற்றும் சித்ரா என இருவரும் தங்களது கதையை மாறி மாறி கூறி வருகின்றனர்.

நேற்றைய எபிசோடில் சித்ரா தான் ஜெயிலுக்கு போன விஷயத்தை சொன்னதை தொடர்ந்து இன்றைய இசை செய்தி கண்ணம்மா தன்னுடைய நண்பனை சிறுவயதிலேயே வெண்பா கொலை செய்து அந்த பழியை தன்மீது போட்டதால் அப்பாவின் அடிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்த கதையை சொல்கிறார்.
தற்போது தன்னுடைய அம்மா உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாகவும் தன்னை பார்க்க ஆசைப்படுவதாகவும் அப்பா பேப்பரில் விளம்பரம் கொடுத்திருப்பதால் ஊருக்கு செல்வதாக கண்ணம்மா சொல்கிறார். ஊரை விட்டு ஓடி வந்த டிரஸ் மற்றும் நியூஸ் பேப்பர் தன்னிடம் இருப்பதாக சொல்கிறார்.

அடுத்து பஸ் ஹோட்டல் வண்டி நிற்க அப்போது இருவரும் சாப்பிட்டுவிட்டு கண்ணம்மா ரெஸ்ட் ரூம் போக ரவுடிகள் அவள் தான் சித்ரா என நினைத்து கத்தியால் குத்த போக சித்ரா தடுத்து நிறுத்து கண்ணம்மாவை காப்பாற்றி அழைத்து வந்து ரவுடிகளிடம் சண்டையிட எதிர்பாராத நேரத்தில் ரவுடிகள் கண்ணம்மாவை குத்தி விடுகின்றனர்.