காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு பாரதி வீட்டுக்கு கூப்பிட கண்ணம்மா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி கதவி அழுது என் வாழ்க்கையில ஏன் இப்படி நடக்கணும் இவ்வளவு நாளா பிரண்டு நம்பி இப்படி என் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிற்கிறேன் என அழுகிறார். பிறகு சௌந்தர்யா கண்ணம்மா கிட்ட மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வா நடந்தது நடந்துடுச்சு இனி எல்லோரும் சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என சொல்ல பாரதி என்ன மன்னிச்சிடு கண்ணம்மா என காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.

மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூப்பிடும் பாரதி.. ஒரே ஒரு கேள்வியால் செக் வைத்த கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

குழந்தைகளை கூப்பிட்டு ஹேமாவிடம் நான் தான் உன்னுடைய அப்பா லட்சுமி இனி நீ யார்கிட்ட வேணாலும் டாக்டர் பாரதி தான் என்னுடைய அப்பா என தைரியமா சொல்லு என கூறுகிறார். பிறகு அப்பா வாங்க வீட்டுக்கு போகலாம் இனி எல்லா பிரச்சனையும் முடிந்தது என சொல்லி குழந்தைகளுடன் கிளம்பிச் செல்ல கண்ணம்மா எதுவும் பேசாமல் அப்படியே நிற்கிறார்.

மீண்டும் கண்ணம்மாவிடம் வரும் பாரதி என்ன கண்ணம்மா என்ன மன்னிக்க மாட்டியா என கையை பிடித்துக் கொண்டு அழ ஒரே வார்த்தையில் மன்னிப்பு கேட்டுட்டா எல்லாமே மறந்து போயிடுமா? நீங்க சொன்ன ஒரு வார்த்தை மன்னிப்புல என்னுடைய பத்து வருட வாழ்க்கை போராட்டம் இருக்கு. பத்து வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு பேப்பரை காட்டித்தான் என்ன வீட்டை விட்டு வெளிய அனுப்புனீங்க. வைத்துள்ள குழந்தையோடு தங்கையிடம் இல்லாமல் சாப்பிட சாப்பாடு இல்லாம நான் பட்ட அவஸ்தைகளும் என்னை உங்களுக்கு தெரியுமா?

இந்த பத்து வருஷத்துல நான் எவ்வளவு அசிங்கம் அவமானம் வேதனைகளை சந்தித்து இருக்கிறேன் தெரியுமா? நீங்க பண்றது எல்லாம் பண்ணிட்டு பேசுறது எல்லாம் பேசிட்டு மன்னிப்பு என்று ஒரு வார்த்தை கேட்டதும் அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீங்க தானே பேசுனீங்க என மறந்துட்டு உங்களோட வந்துடனுமா? என பதிலடி கொடுக்கிறார்.

மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூப்பிடும் பாரதி.. ஒரே ஒரு கேள்வியால் செக் வைத்த கண்ணம்மா - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சின் உங்க பையன் மாதிரி பேச மாட்டான்னு என்ன நிச்சயம்? வெண்பா மாதிரி இன்னொரு ஆள் அந்த இடத்துக்கு வர மாட்டார் என்று எப்படி சொல்ல முடியும்? உங்க பையன் தான் வெள்ளந்தியாச்சே, யார் எது சொன்னாலும் நம்பிடுவாரு என பதிலடி கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல் போன வாரம் கூட எல்லாத்தையும் மறந்துட்டு ஒன்னா சேர்ந்து வாழலாம் வீட்டுக்கு வாங்க என சொன்னேன் ஆனா முகத்துல அடிச்சா மாதிரி முடியாதுன்னு சொன்னாரு ஏன் அப்படி சொன்னீங்க என கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.