பாரதி சொன்ன விஷயம் கேட்டு கண்ணம்மாவின் சித்தி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 07.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. மாமியார் சௌந்தர்யா கொடுத்த புடவையில் பணம் எப்படி வந்தது என பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் லஷ்மி எழுந்து நீ தூங்கலையா மா என கேட்கிறார். அதன்பன்னர் கண்ணம்மா நாளையிலிருந்து நிம்மதியா தூங்குவேன். நாளைக்கு நம்ம வாழ்க்கையில பெரிய விஷயம் நடக்க போகிறது என கூறுகிறார். அப்பாவை பார்க்க போறோமா என்ன லஷ்மி கேட்கிறார்.

ஆமாம் ஆனா நீ படிச்சு கலெக்டர் ஆனதும் போய் பார்க்கலாம் என் பொண்ணு கலெக்டராக ஆகிட்டானு பெருமையா கெத்தா சொல்லுவேன் எனக் கூறுகிறார்.

பாரதி சொன்ன விஷயம்.. வெண்பாவை திட்டித்தீர்த்த கண்ணம்மா - பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் சௌந்தர்யாவும் அவரது கணவரும் பேப்பர் படித்துக் கொண்டிருக்கின்றனர். அஞ்சலி காபி எடுத்து வந்து கொடுக்க இருவரும் வேண்டாம் என கூறி விடுகின்றனர். அகிலன் மற்றும் பாரதி காபியை எடுத்துக் கொள்கின்றனர். அப்பா அம்மாவை காபி குடிக்குமாறு கூறுகிறார் பாரதி. எங்களுக்கு வேண்டாம் என கூறி விடுகின்றனர்.

இந்த நேரத்தில் வெண்பா போன் செய்து ராசி பலன் இன்று உனக்கு வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்க முன் அதனால் என்ன இருக்கிறது என்று கூறுகிறார். அப்படியா அப்போ என் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்க போகிறேன் என்று பாரதி கூறுகிறார். சௌந்தர்யா அகிலாவிடம் அந்த போன் போடல என்ன என கேட்க ஒரு லட்சம் ரூபாய் எனக் கூறுகிறார். ஒரு லட்சம் ரூபாய் இப்போ சில்லு சில்லா சிதற போகுது என கூறுகிறார். அதன் பின்னர் பாரதி போனை வைத்துவிட்டு இந்த வீட்ல எல்லாரும் ரவுடி மாதிரி நடந்துகறீங்க எனக் கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.

லஷ்மி தூங்கிய பிறகு கண்ணம்மாவுக்கு போன் கால் ஒன்று வருகிறது. வெண்பா போன் செய்து மிஸ்டர் கண்ணம்மா வருண் எனக் கூற செருப்பால அடிப்பேன் என்ன கூறுகிறார். அதன்பின் நாளைக்கு விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட வேண்டும் என கூற வருகிறேன் என்று கூறிவிட்டு கண்ணம்மா வைத்துவிடுகிறார். மறுநாள் காலையில் லஷ்மிக்கு சரியான காய்ச்சல். மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதாக கண்ணம்மா கூற நானே டாக்டர்கிட்ட போய்க்கிறேன் நீ நைட்டெல்லாம் தூங்கல எனக் கூறிவிட்டு ஆட்டோ டிரைவரை அழைத்து கொண்டு டாக்டர் பாரதியை பார்க்கச் செல்கிறார்.

அங்கு பாரதி கண்ணம்மாவின் அழகு சித்தியை வரவைத்து அவரிடம் பேசவேண்டும் என்று கூறுகிறார். லஷ்மி வந்திருப்பதாக நர்ஸ் கூற உடனே நீங்கள் கொஞ்சம் உள்ளே இருங்கள் எனக் கூறிவிட்டு லஷ்மியை அழைத்து என்ன ஏது என விசாரிக்கிறார். என்னுடைய அம்மாவிற்கு உடம்பு சரியில்லை நைட் எல்லாம் தூங்க மாட்றாங்க யாரோ ஒருத்தர் போன் பண்றாங்க அதன் பின்னர் அழுகிறார். கிட்ட கூட சரியா பேசுறது இல்ல சரியா தூங்க மாட்றாங்க என கூறுகிறார். முதல்ல உனக்கு பார்க்கலாம் காய்ச்சல் எப்படி இருக்கு என செக் செய்கிறார். ஊசி போடட்டுமா எனக் கேட்க லஷ்மி வேண்டாம் என்று அலறுகிறார். பின்னர் எழுதிக் கொடுக்கிற மாத்திரையை ஒழுங்கா சாப்பிடு என கூறுகிறார். லஷ்மி அங்கிருந்து கிளம்ப பின்னர் கண்ணம்மாவில் சித்தியுடன் தான் கண்ணம்மாமை விவாகரத்து செய்யப் போவதாக கூறுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.