ஜெயிலுக்கு சென்று வெண்பா திருந்தாமல் கண்ணம்மாவை பாரதியிடம் கோர்த்து உசுப்பேற்றி விட்டுள்ளார்.

Bharathi Kannamma Episode Update 06.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வெண்பா கைது செய்யப்பட்ட வீடியோவை அகிலன் காட்டி அதைத் தொடர்ந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதேசமயம் பாரதி தவிர்த்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெண்பா கைது செய்யப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியும் கொண்டனர்.

கந்த சஷ்டி : விரதமும் பலன்களும்.!

ஆனால் பாரதி வெண்பா இப்படியெல்லாம் செய்திருக்க வாய்ப்பே இல்லை அவ ரொம்ப நல்லவ எனக்கூறி வெண்பாவை பார்க்க கிளம்பினார். இந்த பக்கம் அஞ்சலி வெண்பா இவ்வளவு கெட்டவளா அப்போ நமக்கு கொடுத்த மாத்திரை கண்டிப்பா நல்லா இருக்காது என யோசிக்கிறார். இந்த நேரத்தில் அகிலன் உள்ளே வந்து வெண்பா எவ்வளவு கீழ்த்தரமானவனு பார்த்துக்கோ. அவ வீட்டுக்கு வந்தாலே ஒரே நகட்டி வைப்ரேஷன் தான் இருக்கும். தலை முதல் கால் வரை விஷம் ‌‌‌‌‌‌‌‌‌தான். அவள வீட்டுக்குள்ள வரவிடாமல் என்னைக்கோ அடித்து விரட்டி இருப்பேன். பாரதிக்காக தான் அமைதியா இருக்கேன் என அகிலன் கூறுகிறார்.

Annaatthe விட Enemy நல்லா இருக்கு – Enemy Day 2 Public Review | VIshal, Arya, Mirnalini Ravi | HD

நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பாரதி வெண்பாவை பார்த்து பேசுகிறார். வெண்பா இது முழுக்க முழுக்க திட்டமிட்ட ஒன்று. என்ன கண்ணம்மா தான் மாட்ட விட்டார். ஒரு பெண் உயிருக்கு ஆபத்துன்னு கருவை கலைக்க வந்திருந்தார். நான் முடியாது என்று தான் சொன்னேன் ஆனால் வந்திருந்த இருவரும் பணத்தை எடுத்து என்னிடம் கொடுத்து கெஞ்சினார்கள். அதற்குள் போலீஸ் உள்ளே வந்து விட்டது. என் ரூமில் பணம் இருப்பதாக கூறி என்னை கைது செய்து விட்டார்கள். போலீஸ் வெளியே என்னை அழைத்து வரும்போது கண்ணம்மா ஓரமாக நின்று வில்லத்தனமாக என்னை பார்த்து சிரித்தார் என கூறி பாரதிக்கு அதிர்ச்சி கொடுத்தார் வெண்பா. உன்னுடைய எல்லா பிரச்சனைலயும் நான் இருக்கேன் அது கண்ணம்மாவுக்கு பிடிக்கல. ஒரு நாள் நான் திரும்பவும் பாரதியோட சேர்ந்து வாழத்தான் போறேன் அதுக்கு நீ தடையாக இருக்க. உனக்கு பெருசா ஆப்பு வைக்கிறேன் என சவால் விட்டா. அதான் இப்படி ஜெயில் வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டா என கூறுகிறார் வெண்பா. மேலும் பாரதியின் கையைப் பிடித்து என்னை ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய் என கூறுகிறார். பாரதி இதையெல்லாம் நீ சொல்லனுமா வெண்பா என சொல்லிவிட்டு அவரை வெளியில் எடுக்க முயற்சி செய்வதாக கூறி விட்டு வீட்டுக்கு வருகிறார்.

வீட்டில் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் வெண்பா ஜெயிலுக்கு போனதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் அகிலனும் வந்து வெண்பா மீது இன்னும் இரண்டு மூன்று கேஸ்கள் பதிவாகி இருப்பதாக கூறுகிறார். இந்த நேரத்தில் பாரதி வருகிறார். வெண்பா பற்றி பாரதியுடன் பேசுகின்றனர். ஆனால் பாரதியோ வெண்பா அப்படி பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை என சொல்கிறார். அகிலன் ஊரே காரி துப்பினாலும் பாரதி நம்ப மாட்டான் என கூறுகிறார். உடனே பாரதி அகிலனை திட்டி விட்டு உள்ளே செல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட்.

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் கண்ணம்மாவுக்கு கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வருகிறது. இதனைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.