மொட்டை மாடியில் ஏறி நின்று அப்பா யார் என்று கேட்டு மிரட்டுகிறார் ஹேமா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடு பாரதி கண்ணம்மாவை இதுவரைக்கும் எப்படி எல்லாம் அசிங்கப்படுத்தி பேசினார் என்பதை நினைத்துப் பார்த்து வருந்தி வருகிறார்.

மொட்டை மாடியில் ஏறி நின்று மிரட்டும் ஹேமா.. உண்மைகளை உடைத்த பாரதி, கடைசியில் காத்திருந்த ஷாக் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் கண்ணம்மா ஹேமாவுக்கு மருந்து வாங்க சென்ற நிலையில் ஹேமா அப்பா யார் என்பதை தெரிந்து கொள்வதாக வேண்டும் என முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் சென்று நின்று மிரட்டுகிறார். அப்பா யாருன்னு சொல்லாமல் கீழே வரமாட்டேன் என சொல்ல அஞ்சலி உண்மையை சொல்லிவிடலாம் என கூறியும் கண்ணம்மா வேண்டாம் என மறுக்கிறார்.

அடுத்து வெண்பா குடும்பமும் கீழே வந்து பார்த்து பதற வெண்பா சந்தோஷப்பட்டு நிற்க ஹேமா வெண்பா ஆன்ட்டி கிட்ட எங்க அப்பா யாருன்னு கேட்டேன் அதுக்கு அவங்க உங்க அம்மா நடத்த கெட்டவ அவளுக்கு உங்க அப்பா யாருன்னு தெரியாது என சொன்னாங்க. அதனாலதான் நான் கோபப்பட்டு கல்லெடுத்து அவங்க மண்டையை உடைத்தேன். என் அப்பா யாருன்னு சொல்லாததுனால தானே இப்படி எல்லாம் பண்றாங்க அதனால யாருன்னு சொன்னா தான் கீழே இறங்குவேன் என மிரட்டுகிறார்.

மொட்டை மாடியில் ஏறி நின்று மிரட்டும் ஹேமா.. உண்மைகளை உடைத்த பாரதி, கடைசியில் காத்திருந்த ஷாக் - பாரதி கண்ணம்மா இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதற்குள் பாரதி வந்து நான்தான் உன் அப்பா கண்ணம்மாவும் நானும் புருஷன் பொண்டாட்டி என சொல்ல ஹேமா நம்ப மறுக்கிறார். சௌந்தர்யா சொல்லியும் நம்ப மறுக்க பிறகு லட்சுமி ஆமாம் என சொல்லி நம்ப வைக்க அதன் பிறகு ஹேமா ஏதோ ஒரு தைரியத்துல ஏறிட்டேன் இப்போ பயமா இருக்கு என சொல்ல கீழே உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.