பாரதியின் திட்டம் சௌந்தர்யாவுக்கு தெரிய வர அவர் பயங்கர கடுப்பாகி உள்ளார்.

Bharathi Kannamma Episode Update 03.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மா வீட்டுக்கு சென்று பாரதியை விவாகரத்து செய்துவிடு என அஞ்சலியின் அம்மா கூறியதும் கண்ணம்மா அவரை திட்டி வெளியே அனுப்பினார்.

துன்பங்களில் இருந்து விடுபடுவது எப்படி? : ஸ்ரீரமணர் விளக்கம்

கண்ணமா வீட்டிலிருந்து பாக்கியலட்சுமி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது அவரை சௌந்தர்யா பார்த்துவிடுகிறார். வழியில் மடக்கி அவரிடம் எங்க போய்ட்டு வர என்ன ஏது விசாரித்தபோது அவர் பாரதி விவாகரத்து வாங்கித்தர சொன்ன உண்மையை கூறிவிடுகிறார். ஆனால் கண்ணம்மா சாகுற வரைக்கும் பாரதிதான் என்னுடைய புருஷன் என சொல்லி விட்டார் எனவும் கூறுகிறார். பிறகு சௌந்தர்யா பாக்கியலட்சுமியை திட்டி அனுப்பி வைக்கிறார்.

இந்தப் பக்கம் பள்ளியில் பாரதி ஹேமாவுக்கு சாப்பாடு ஊட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஹேமா இன்னும் சமையல் அம்மா வரவில்லை என கூறுகிறார். அவர் எனக்காக ஏதாவது ஸ்பெஷலாக செய்து வருகிறார் என சொல்கிறார். இந்த நேரத்தில் கடையில் வேலை பார்க்கும் மிஸ் கண்ணம்மா கொண்டுவந்த சிக்கன் சூப்பராக இருந்ததாக கூறுகின்றனர். இதனால் ஹேமா சிக்கன் வாங்கிட்டு வரேன் என கண்ணம்மாவை நோக்கி ஓடுகிறார். அதெல்லாம் போகக் கூடாது என பாரதி அவரை தடுத்து நிறுத்த அந்த நேரத்தில் கண்ணம்மா வந்து ஏன் என்கிட்ட வாங்க கூடாது என்ன தப்பு என கேட்கிறார். பிறகு ஹேமா மற்றும் பாரதி என இருவருக்கும் சிக்கனை கொடுக்கிறார்.

Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie

இந்தப் பக்கம் லஷ்மிக்கு சாப்பாடு ஊட்ட அவ பாரதி ஹேமா ஒன்றாக இருப்பதை பார்த்து அப்பாவின் பாசத்திற்கு ஏங்குகிறார். எனக்கு அப்பா இருக்காரா இல்லையா என கண்ணம்மாவிடம் கேட்கிறார். பாரதி தன்னுடைய அப்பா என்ன சொல்ல முடியாமல் தவிக்கும் கண்ணம்மா இன்று இரவு உங்க அப்பா பற்றி ஒரு விஷயத்தை சொல்கிறேன் என கூறுகிறார். இதனால் லஷ்மி குஷியாகிறார்.

இந்த பக்கம் பாரதியின் திட்டம் தெரிந்த சௌந்தர்யா அவரிடம் சண்டை போட வீட்டுக்கு கோவமாக செல்கிறார். சௌந்தர்யாவின் கணவர் வீணு பாரதி ஹேமாவுக்கு சாப்பாடு கொண்டு சென்று இருப்பதாக கூறுகிறார். பிறகு சௌந்தர்யா பாரதியின் திட்டத்தை கூற இதுபற்றி பாரதியிடம் கேட்காத. நமக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு என அவனுக்கு தெரிந்தால் இதில் அவன் மும்முரமாக இறங்கி விடுவான். நமக்குத் தெரிந்த விஷயம் அவளுக்குத் தெரியாமல் இருப்பதுதான் நல்லது என கூறுகிறார். மேலும் கண்ணம்மா உறுதியாக இருக்கும் போது விவாகரத்து கிடைக்காது எனவும் சொல்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.