பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ்வதை கேள்விப்பட்ட வெண்பா உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

Bharathi Kannamma Episode Update 02.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணமா வீட்டில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த பாரதி ஒரு வழியாக தூங்கச் சென்ற நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் சத்தம் கேட்டு அறிந்துகொள்கிறார். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருக்கு மழை பெய்யும் என சொல்லியிருந்தார்கள் அதேபோல் மழை பெய்கிறது என சொல்கிறார். எதேச்சையாக தரையில் கால் வைக்க தண்ணீர் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். உடனே லைக் போட்டு பார்த்து வீடு முழுவதும் தண்ணீர். ‌ கதவைத் திறந்து பார்த்தால் மழை கொட்டு கொட்டு என கொட்டுகிறது. வீட்டிற்குள் தண்ணீர் இன்னும் அதிகமாக வந்து விட்டது.

பேட்மிண்டன் வேர்ல்டு : இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் கலக்கல்; அஸ்வினி கலக்கம்..

இதெல்லாம் எதுவும் தெரியாமல் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார் கண்ணம்மா. ரூமிற்கு வெளியே இருந்து கண்ணம்மாவை எழுப்புகிறார் பாரதி. கண்ணம்மா அசந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அருகில் சென்று அவர் பெட்ஷீட்டை இழுத்துப் போட்டு எழுப்புகிறார். உடனே அலறி எழுந்த கண்ணம்மா இந்த மாதிரி வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க என கூறுகிறார். உடனே பாரதி அடச்சே வெளியே ஒரே மழை என சொல்கிறார். அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என கேட்கிறார். வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணி வந்துருச்சி கொஞ்சம் கீழே பாரு என கூறுகிறார்.

உடனே கண்ணம்மா அய்யோ என அலரி எழுந்து வெளியே வருகிறார். கதவு திறந்திருப்பதை பார்த்து கதவைத் திறந்தது என கேட்க நான் தான் என சொல்கிறார். பிறகு இப்போ என்ன செய்வது என பாரதி கேட்க தண்ணீரை இறைத்து தான் வெளியே ஊற்ற வேண்டும் என கூறுகிறார். எவ்வளவு நேரம் என கேட்க மழை நிக்கிற வரைக்கும் என கண்ணம்மா கூறுகிறார். பிறகு கண்ணம்மா தண்ணீரை இறைத்து வெளியேற்ற அதன்பிறகு பாரதியும் அவருக்கு உதவி செய்ய செல்கிறார். ஒரு கட்டத்தில் பாரதி தண்ணீரில் வழுக்கிக் கீழே விழ பார்க்க கண்ணம்மா அவரை தாங்கிப் பிடிக்கிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா?

இந்தப் பக்கம் சௌந்தர்யாவுக்கு அவருடைய கணவர் காபி போட்டுக் கொடுத்துவிட்டு என்ன தூங்காம இங்கே இருக்க என கேட்கிறார். உடனே சௌந்தர்யா பாரதிகண்ணம்மா வீட்டுக்கு போயிருக்காங்கல என்னாச்சுனு தெரியல. உங்க பையன் எப்படி இருக்கான் கண்ணம்மா கிட்ட ஒரே நல்ல சண்டை போட்டு வந்துடுவானோனு யோசிச்சிட்டு இருக்கேன் என கூறுகிறார். அதெல்லாம் வர மாட்டான். அவன் போக கூடாதுன்னு நினைச்சிருந்தா போயிருக்க மாட்டான்‌. கண்ணம்மாவும் இப்போ குழந்தைகளுக்காக என நிறைய விட்டுக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அதன்பிறகு சௌந்தர்யா கண்ணம்மாவுக்கு போன் செய்கிறார். என்ன ஆச்சு எப்படி இருக்க என கேட்கிறார். பாரதி நன்றாக தூங்குவதாக சொல்கிறார். எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்க பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை. வீட்ல தான் கொஞ்சம் பிரச்சனை என சொல்கிறார்.

உடனே பதறிப்போன சவுந்தர்யா என்னாச்சு என கேட்க மழைத்தண்ணி வீட்டுக்குள்ள வந்துடுச்சு என சொல்கிறார். அப்புறம் என்ன பண்ணிங்க என கேட்க தண்ணீர் இறைத்து வெளியே ஊற்றினோம். அவரும் உதவி பண்ணார் என கூறுகிறார். சௌந்தர்யாவின் கணவர் நல்லா வேலை வாங்கு. குடும்பத் தலைவன் பொறுப்பை உணரட்டும் என கூறுகிறார். பிறகு கண்ணம்மாவுக்கு சௌந்தர்யா சில அறிவுரைகளை கூற அதையெல்லாம் கேட்டுக் கொண்ட கண்ணம்மா காலையில் டிபன் செய்ய வேண்டும் அப்புறம் பேசுகிறேன் என போனை வைத்து விடுகிறார்.

இந்த பக்கம் சாந்தி வெண்பாவுக்கு போன் செய்து பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வசிப்பது கூறுகிறார். பாரதி சார் பொண்டாட்டி தான் வேணும்ன்னு போயிட்டாரு. உங்களை பெயில் எடுக்க எதுவும் உதவி பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு. எனக்கு கஷ்டமா இருக்கு உங்களுக்கு எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது என சாந்தி கூறுகிறார். பிறகு சாந்தி போனை வைத்து விடுகிறார்.

இந்த பக்கம் மறுநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்து கொண்டிருக்க பாரதி எடுத்துக் கொள்கிறார். அவரை தீபாரதனை எடுத்துக்கொள்ளுமாறு கண்ணம்மா சொல்ல அவர் எனக்கு ஒன்றும் வேண்டாம் என கூறுகிறார். என் மேல இருக்குற கோவத்தை சாமி மேல காட்டாதீங்க என கூறிவிட்டு அவரது நெற்றியில் விபூதி வைக்கிறார். இனி தினமும் காலையில இவ முகத்துல முழிக்க நானா நினைத்தாலே கடுப்பா இருக்கு என புலம்புகிறார் பாரதி. அதன்பிறகு கண்ணம்மா காபி எடுத்து வந்து வைக்கிறார். நான் ஒன்னும் கேக்கலையே என கூறுகிறார். எப்பயும் காலையில் எழுந்ததும் காபி டீ குடிக்கும் பழக்கம் தானே என கூறுகிறார். எனக்கு ஒன்றும் வேண்டாம் என கூறுகிறார். எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்கீங்க நான் பார்க்கிறேன் என சொல்லிவிட்டு கண்ணம்மா உள்ளே செல்கிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா உட்பட அனைவரும் அமர்ந்து கொண்டே இருக்க அப்போது ஹேமாவும் லட்சுமியும் ஓடி வருகின்றனர். நான் தலைவரை விட்டுட்டு வந்தேனே யார் கலைத்தது என கேட்க மாறி மாறி கை காட்டிக் கொள்கின்றனர். பிறகு அவர்களுக்கு அஞ்சலியும் சௌந்தர்யாவும் தலைவாரி விடுகின்றனர். ஹேமா எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போல இருக்கு என கூறுகிறார். சௌந்தர்யாவின் கணவர் அப்பா சொல்லிட்டு தானே போனாரு என கூறுகிறார். என்கிட்ட சொல்லல என ஹேமா சொல்ல சௌந்தர்யா முக்கியமான வேலை அதனாலதான் உங்க கிட்ட கூட சொல்ல முடியல எனக்கூறி சமாளிக்கிறார். மேலும் ஸ்னாக்ஸ் புட் கட் பண்ணி வச்சிருக்கோம் மிச்சம் வைக்காமல் சாப்பிடனும் என சொல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மதியம் சமையல் அம்மா சாப்பாடு எடுத்து வருவார்கள் என சொல்ல ஹேமா உற்சாகம் அடைகிறார். தினமும் கொண்டு வருவார்களா என கேட்கிறார். இன்னைக்கு கொண்டு வருவாங்க மத்ததை அப்புறம் பார்க்கலாம் என சௌந்தர்யா சொல்லி அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.