கண்ணம்மாவை பாரதி ரூமுக்கு அழைத்து சிகரெட் பிடிக்க கண்ணம்மா மயங்கி விழுந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியை திருத்தப் போவதாக மதுவிடம் சொல்ல பிறகு மது அது ரொம்ப கஷ்டம் சௌந்தர்யா மேடம் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியல நீ வேற முயற்சி பண்ண போறேன்னு சொல்ற பார்க்கலாம் என சொல்லி வீட்டுக்கு கிளம்புகிறாள்.

அதன் பிறகு கண்ணம்மா கிளாஸ் ரூமுக்கு வந்து மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பாரதி அவருடைய ரூமுக்கு அழைப்பதாக ப்யூன் வந்து சொல்ல கண்ணம்மா பாரதியை சந்திக்க செல்கிறார். பிறகு பாரதி கண்ணம்மாவை ரூமுக்குள் அழைத்து கதவை சாற்றி உட்கார வைத்து புகை பிடித்துக் கொண்டே பேச கண்ணம்மா ஒரு கட்டத்தில் சிகரெட் புகை காரணமாக மயங்கி கீழே விழுகிறார்‌.

பிறகு கண்ணம்மாவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று கண் விழித்ததும் என்னாச்சு பாரதி ஏதாவது தப்பா நடந்துகிட்டானா என செல்வம் கேட்க கண்ணம்மா இப்போ பாரதி பத்தி சொன்னா சௌந்தர்யா மேடம் இன்னும் வருத்தப்படுவாங்க என நினைத்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை எனக்கு சின்ன வயசுல இருந்தே ரூம்ல தனியா இருந்தா இப்படி மயக்கம் போட்டு விழுந்திடுவேன். அந்த மாதிரி தான் இன்னைக்கு நடந்துச்சு என சொல்லி சமாளித்து விடுகிறார்.

இந்த பக்கம் சௌந்தர்யா பாரதியை நிற்க வைத்து என்னாச்சு நீ என்ன பண்ண என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எதற்கு ஸ்கூலுக்கு வந்த? கண்ணம்மாவிடம் தனியா பேச என்ன இருக்கு என கேள்வி மேல் கேள்வி கேட்க அப்போது வரும் செல்வம் கண்ணம்மா சொன்னதை சொல்ல பாரதி நல்ல வேலை கண்ணம்மா நம்மள காட்டி கொடுக்கல என நிம்மதி அடைகிறார்.

பிறகு சண்முக வாத்தியாரிடம் கண்ணம்மாவை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டுங்க என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா பாரதியிடம் நீ மட்டும் ஏதாவது பண்ணனு தெரிஞ்சிருச்சு அவ்வளவுதான் சும்மா விட மாட்டேன் என மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.