பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அழகிய காதல் கதையாக தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் நாளடைவில் அப்படியே எதிர்மறையாக மாறி எதிர்மறை விமர்சனங்களை பெற தொடங்கியது.

முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.. உறுதி செய்த சம்பவங்கள் - இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

குறிப்பாக ஒரே ஒரு டி என் ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும் என இருக்கும் நிலையில் இந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் தொடர்ந்து இழுத்துக் கொண்டே போனது மக்கள் மத்தியில் பெரிய அளவில் சலிப்பை உண்டாக்கியது.

இப்படியான நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் டி என் ஏ டெஸ்ட்டுடன் முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக இதுவரை பாரதி கண்ணம்மா சீரியல் மட்டுமே நடித்து வந்த ரூபா ஸ்ரீ ( சௌந்தர்யா ) இந்த சீரியல் முடிவுக்கு வருவதால் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இலக்கியா சீரியலில் நடிக்க ஒப்பந்தமானதாக பார்க்கப்படுகிறது.

முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல்.. உறுதி செய்த சம்பவங்கள் - இதையெல்லாம் நோட் பண்ணீங்களா?

இதனால் வெகுவிரைவில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு விரைவில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.