கல்யாண நாளில் சரவணன் கொடுத்த கிப்ட்டை பார்த்து கண் கலங்கியுள்ளார் சந்தியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களான பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி என இரண்டு மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

கல்யாண நாளில் சந்தியாவுக்கு சரவணன் கொடுத்த கிப்ட்.. பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் - பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்

இன்றைய எபிசோடில் பாரதி கொடுத்த வாக்குக்காக உன்னுடைய அம்மாவை காட்டித்தான் ஆக வேண்டும் வேறு வழி இல்லை ஹேமாவின் அம்மாவை வரைகிறார். இந்த பக்கம் சந்தியா சரவணன் மொட்டை மாடியில் நின்று கொண்டு நிலவு பற்றி பேசி பிறகு 12 மணி ஆனதும் மாறி மாறி வாழ்த்து கூறிக்கொண்டு இருவரும் கிப்ட் கொடுத்து கொள்கின்றனர். சரவணனை செப்பாக வரைந்த போட்டோவை பரிசாக கொடுக்கிறார் சந்தியா. சரவணன் சந்தியாவுக்கு போலீஸ் உடையை கிப்ட்டாக கொடுக்க இதை பார்த்து அவர் கண் கலங்குகிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா லக்ஷ்மி எழுந்தது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சாக்லேட் கொடுத்து கொண்டாடுகிறார். கடவுளிடம் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் ஹேமாவுக்கு நான் தான் அம்மா என்பதை பாரதி சொல்ல வேண்டும். லட்சுமியை அவர் மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். பிறகு ஹேமாவுக்கு போன் போட்டு வாழ்த்து கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம் சௌந்தர்யா ஹேமாவுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் வந்த பாரதி ஹாஸ்பிடல் ஒரு ஆபரேஷன் இருக்கிறது ஃபங்ஷனுக்கு வந்துவிடுகிறேன் என சொல்ல ஹேமா அம்மாவோட போட்டோவை காட்ட தான் சொல்லி இருக்கீங்க என திரும்பவும் ஞாபகப்படுத்த கண்டிப்பா அம்மாவை காட்டுவேன் என பாரதி வாக்கு கொடுக்கிறார்.

கல்யாண நாளில் சந்தியாவுக்கு சரவணன் கொடுத்த கிப்ட்.. பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் - பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்

ஹாஸ்பிடலில் சிவகாமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இப்போது முழுமையாக குணமாகிவிட்டார் இன்னைக்கு வீட்டுக்கு போகலாம் என கூறுகிறார். இந்த நேரத்தில் சரவணன் சந்தியா வந்து தன்னுடைய அப்பா அம்மா இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்குகின்றனர்‌. பிறகு பாரதியோட வீட்டுக்கு போகணும் என சொல்கின்றனர். இந்த நேரத்தில் பார்வதி பாஸ்கர் உள்ளே வந்து சரவணன் சந்தியாவுக்கு வாழ்த்து கூறி கேக் கட் செய்ய வைக்கின்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகள் பாரதி வீட்டில் தடபுடலாக நடக்க சௌந்தர்யா பாரதி என்ன செய்யப் போகிறான் என நினைத்து பதற்றத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் ஹேமா வந்து என் பிறந்தநாள் காண்டா செலபிரேட் பண்ண போறீங்களா என கேட்கிறார். லட்சுமியோட பிறந்தநாளையும் சேர்த்து தான் கொண்டாட போகிறோம் என சௌந்தர்யா சொல்கிறார். பிறகு கண்ணம்மாவும் ஹேமாவை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்.

பாரதியின் அப்பா இந்த ஃபங்ஷன்ல நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும் கண்ணம்மா என சொல்ல முடியாது மாமா அவர் என் பொண்ணுக்கு வேற யாரையோ அம்மாவா காட்டுனா அதை என்னால பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது என கூறுகிறார். நான் தான் சொன்னேன்ல அவ பழைய கண்ணம்மா கிடையாது. இன்னிக்கு ஒரு பெரிய பிரளயமே வெடிக்க போகுது என வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.