பாரதிகண்ணம்மா சீரியல் புகழ் அகிலனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

Bharathi Kannamma Akilan Marriage Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதல் சீசனில் பாரதியின் தம்பியாக அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அகிலன்.

இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளம் உருவாகி இருந்த நிலையில் வெள்ளித்திரையில் கிடைத்த வாய்ப்புகள் காரணமாக சீரியலில் இருந்து வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வெள்ளி திரையில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது அக்ஷயா முரளிதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.